Saturday, July 6, 2019

தோணி






கில்கிறிஸ்ட், சங்கக்காரா  போன்ற பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டுமே பிரமாதமாக விளையாடுகிறபோது, நம் இந்திய அணிக்கு அதுபோல் ஒருவர் இல்லையே என்று நினைத்து கொண்டு இருந்த போது தான் வந்தார் மகேந்திர சிங் தோணி !




சச்சின் அவுட் ஆனதும் டிவியை நிறுத்தியவர்களை , மேட்ச் இறுதி வரை தனது அதிரடி finishingயால் பார்க்க வைத்தார்  தோணி.




இந்திய ஒரு பலமான கிரிக்கெட் அணியாக இருந்தாலும், 1983 WCக்கு பிறகு நமக்கு உலகக் கோப்பை கைக்கு கிடைக்கவே இல்லை.  அப்படி இருந்தபோது, மூத்த வீரர்கள் இல்லாமல் தோணி தலைமையிலான இளைஞர் படை 2007 T20 WC க்கு சென்றார்கள்.

 பலரும்   சச்சின், கங்குலி போன்றவர்கள் இல்லாமல் வெற்றி வாய்ப்பு சாத்தியம் இல்லை என்று நினைத்த போது, தோணி அணி முதல் T20 உலகக் கோப்பையை வென்றது.



2003 WCஇல்  இறுதிவரை இந்தியா சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது , 2007 WCஇல்  வங்காளதேசத்திடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிது . அந்த தோல்விகளின் வருத்தத்தில் இருந்த  இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும்கொண்டாட்டம் ஆகி போனது . கிரிக்கெட்டை பார்க்காத ரசிகர்களும்,இந்த வெற்றியால் தோணியை ரசிக்க தொடங்கினார்கள்.

 பிறகு ஐபிஎல், 2011 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று வரிசையாக தோணி தலைமையில் அணி பெற்ற வெற்றி, ஒரு மாஸ் கதாநாயகனாகவே இந்திய ரசிகர்கள் மத்தியில் தோணியை மாற்றியது.



இந்தியாவில் வந்த மற்ற Biopic படங்களின் வசூல் சாதனையை கூட தோணி Biopic  முறியடிக்கும் அளவுக்கு அவரின் பிம்பம் உருவானது.


இந்தியாவுக்கு எப்பவும் மறக்கமுடியாத  சிறந்த விக்கெட் கீப்பர், கேப்டன், Finisher தோணி தான் !


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல தோணி