Tuesday, August 14, 2018

புலியும் சிங்க(ள)மும்!

             புலியும் சிங்க(ள)மும்!



ஒரு சிறிய நாட்டுக்கு அருகில் இரண்டு பெரிய நாடுகள் இருந்தால்,யார் அந்த சிறிய நாட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று ஒரு போட்டியே நடக்கும். இது தான் உலக நியதி. இதில் இந்தியாவும், சீனாவும் விதிவிலக்கு அல்ல. இந்த சூழல் காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது.

இலங்கை தமிழர்கள்(including Srilankan Tamil Muslims) பற்றி இரண்டு விதமாக சொல்கிறார்கள்        1.இலங்கையின் பூர்வீக மக்கள்
2.தமிழகத்தில் இருந்து  சோழ அரசுக்கு முன் இடம்பெயர்ந்தவர்கள்.


இலங்கையில் 1796 முதல் ஒவ்வொரு இடமாக பிரிட்டிஷ் கைப்பற்ற துவங்கியது. 1815ல் முழுவதுமாக இலங்கை பிரிட்டிஷ் வசம் வீழ்ந்தது.
இலங்கையில் தேயிலைத்  தோட்டங்களை உருவாக்குவதற்காக   கொத்தடிமைக் கூலிகளாக (Bonded Labour) இந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களை மலையக தமிழர்கள் அல்லது இந்திய தமிழர்கள் என்று கூறுவார்கள். இதைப்  போல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆளப்பட்டப்  பல்வேறு உலக நாடுகளுக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.

இதை குறிப்பிட்டுத்தான் கபாலி கிளைமாக்ஸில் கூட வில்லன் டோனி லீ கபாலியை பார்த்து Kling (அடிமை அல்லது தெற்காசிய நாடுகளில் இருந்து வந்தவர் ) Dog என்று கூறுவார்.

1948, இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி மலையக தமிழர்கள் தாயகம் திரும்பினர். சிலர் அங்கேயே தங்கிவிட்டனர். 1956ல் பண்டாரநாயக்கா இலங்கை பிரதமர் ஆனார். அதன்பிறகே சிங்கள தேசியவாதம் வளர்க்கப்பட்டது . 1958 இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரம் தொடங்கியது. சுமார் 300 பேர் இறந்தார்கள்.தமிழர் பகுதியில்(வடக்கு & கிழக்கு மாகாணங்கள்) சிங்களர்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது


1972, சிலோன் என்ற பெயர்  இலங்கை ஆனது. பின்னர் புத்த மதத்துக்கு மட்டும் சிறப்பு உரிமை வழங்கப்பட்டது.1976-1983 தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பவும் இனக்கலவரம் நடந்தது.
1976இல் விடுதலைப் புலிகள்
 (LTTE-

Liberation Tigers of Tamil Eelamவேலுப்பிள்ளை பிரபாகரனால் 

உருவாக்கப்பட்டது.


1981, யாழ்பாணத்தில்
(Jaffna) " யாழ் பொது நூலகம் " இருந்தது. அந்த நூலகத்தில் தமிழர் வரலாறு பற்றிய தகவல்கள்  இருந்தது. அது சிங்களக் குழுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இன அழிப்பு (Ethnical cleansing) செய்ய நினைப்பவர்கள் முதலில் வரலாற்றை தான் அழிப்பார்கள்.

இதைக் கேட்கும்போது  அம்பேத்கர் சொன்ன தத்துவம் ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது .

"They cannot make history who forget history”.-B.R.Ambedkar

1983, முதலாம் ஈழப்போர்(1983-1987)
தொடங்கியது. 1987 இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் விரிவாக்கத்தைத் தடுத்து யாழ்பாணத்துக்குள்ளே (இலங்கையின் வடக்கு பகுதி) மட்டும் சுருக்கினர். ஆனாலும்  இந்திரா காந்தி அரசின் ஆயதம் மற்றும் பண உதவி இருந்ததால் விடுதலைப்புலிகள் வலுவாகப்  போரிட்டது. விடுதலைப்புலிகளை வளர்த்துவிட்டதே RAW (Research and Analysis Wing- இந்திய உளவுத்துறை)  என்றும் செய்தி உலவுகிறது.

இந்திரா காந்தி பாணியையே ராஜீவ்காந்தியும் முதலில் பின்பற்றினார்.
இலங்கை அரசின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டத்  தமிழர் பகுதிகளில் மருந்து மற்றும் உணவு பொட்டலங்களை இந்திய விமானப்படை மூலம் ராஜீவ்காந்தி போடச் சொன்னார். இது இலங்கைக்கு இந்தியா மீது ஒரு அச்சத்தை உருவாக்கியது.


29 ஜூலை 1987ல் இந்தியா- இலங்கை (  ராஜீவ்காந்தி vs ஜெயவர்த்தனே) ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன் பிரிவுகள்:

1. இலங்கை அரசு தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும்

2. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்

3. விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும்

ஒப்பந்தத்தின் தவறுகள் :

விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதது. அவர்கள் ஆயுதங்களை  வலுக்கட்டாயமாக ஒப்படைக்க செய்தது.


இலங்கைக் கப்பல் படையிடம் பிடிப்பட்ட விடுதலைப்புலித் தளபதிகள் Cyanide சாப்பிட்டு இறந்தார்கள். இது LTTEல் சலசலப்பு ஏற்படுத்தியது.


மறுபடியும் LTTE ஆயுதங்களை கையில் எடுத்தது. அதனால்
ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை (IPKF) இலங்கைக்கு அனுப்பினார். ஆனால் இதுவரை இலங்கை அரசு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்க முடியாமல் இருந்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு  மறைமுகமாக பணம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக சண்டையிட சொன்னதாகக் கூறப்படுகிறது.


இந்தியா அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது ஒரு தவறான முடிவாகப் பார்க்கப்பட்டது.அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகவே அட்டூழியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியா அமைதிப்படையை சரியான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல்  அனுப்பியதால் , இந்திய அமைதிப்படைக்கு LTTEயால் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது.


அன்றையத் தமிழக முதல்வர் கருணாநிதி ஈழப் பிரச்சினையை மேற்கோள்காட்டி, நம் இந்திய அமைதிப்படையை வரவேற்காததால், வடஇந்திய ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


பிறகு இரண்டாம் ஈழப் போர் (1990-1995)தொடங்கியது. JVP(மக்கள் விடுதலை முன்னணிஎன்ற சிங்கள கட்சி இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை (1987) கடுமையாக எதிர்த்தது . 1990களில் உட்பூசல் காரணமாக வடக்கு மாகாணத்தில் இருந்த இலங்கை தமிழ் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
1991ல் விடுதலைப்புலிகளால் ராஜீவ்காந்தி தமிழகத்திலே  படுக்கொலை செய்யப்பட்டார். 1993ல் இலங்கை பிரதமர் பிரமேதாசா  விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார்.


1994ல் சந்திரிகா குமாரதுங்க இலங்கை பிரதமர் ஆனார். முதலில் விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினார். பிறகு 1995ல் மூன்றாம் ஈழப் போர்(1995-2002) துவங்கியது .


2002ல் சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது (Norway as mediator between Srilankan Govt and LTTE ).

1. இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது இருந்த தடையை நீக்க வேண்டும்.
2. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் 2003ல் பேச்சுவார்த்தையில் இருந்து விடுதலைப்புலிகள் விலகியது. போர் நிறுத்தம் மட்டும் நீடித்தது. 2004 கிழக்கு மாகாண விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணா மற்றும் 5000 விடுதலைப்புலிகள்  இலங்கை அரசிடம் சரணடைந்தனர். பின்னர் கருணா இலங்கை MP ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார்.


2005, இலங்கை தேர்தலை இலங்கை தமிழர்கள்  புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் சொன்னார்கள். அது கடைசியில் ராஜபக்சேக்கு சாதமாக முடிந்து பிரதமர் ஆனார். அவர் ஒரு சீனா ஆதரவு பிரதமர். அதனால் இலங்கைக்கு சீனா பல உதவிகளை செய்தது. இலங்கை அரசும் பதிலுக்கு நன்றியை காட்டியது. குறிப்பாக சில துறைமுகங்களை குத்தகைக்கு தந்தது.
(Eg. Hambantota Port)


2006இல் நான்காம் ஈழப் போர்(2006-2009) தொடங்கியது . 2009 மே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளும் வீழ்ந்தார்கள். ஈழ போரும் முடிந்தது.

உலக நாடுகளின் அழுத்தத்தால் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" (LLRC) இலங்கையில் அமைக்கப்பட்டது. இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் விதிமீறல்களை LLRC பதிவு செய்தது.


2011ல் ஐநா சபை இருதரப்பினரும் குற்றம் இழைத்ததாகக் கூறியது. பொது விசாரணை தேவை என்று சொன்னது. ஆனால் இலங்கை அரசு "ஐநா அறிக்கை ஒரு பக்கம் சார்ந்து உள்ளது " என்று விமர்சித்தது.


2011-12ல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் (UNHRC) இலங்கை அரசின் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இந்தியா வாக்களித்தது.


2015ல் மைத்திரிபால சிறிசேன இலங்கை பிரதமர் ஆனார். அவர்  தமிழர்களுக்கு அவசர மறுசீரமைப்பு செய்ய "Special Presidential Task Force " என்ற அமைப்பை உருவாக்கினார். முறையான விசாரணை நடத்தவும் முயற்சி செய்தார்.


விடுதலைப்புலிகள் வீழ்ந்ததுக்கு சில காரணங்கள்:

1.இலங்கையில் இலங்கை தமிழர்கள் ஒரு சிறுபான்மைச் சமூகம் (11%) . வடக்கு & கிழக்கு மாகாணத்தில் மட்டும் பெரும்பான்மையாக இருந்தார்கள். விடுதலைப்புலிகளால் தமிழ் முஸ்லிம்களும் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணா பிரிந்து சென்றது பெரும் பின்னடைவானது.

2.மலையக தமிழர்கள் (Indian Tamils 4%.They are the only Indian Diaspora in Srilanka) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதும் ,
விடுதலைப்புலிகள் அவர்கள் ஆதரவை பெற தவறிவிட்டனர் .
இங்கு உள்ள ஈழ ஆதரவாளர்களும் மலையக தமிழர்களுக்கு பெரும்பாலும் உதவி செய்வது இல்லை.

3.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சி செய்தார்கள், அரபு நாடுகளில் பல போராளி குழுக்கள் தனி நாடு பெற்றது. பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவையே எதிர்த்து கியூபாவை கட்டமைத்தார். ஆனால் இந்த நாடுகள் ரஷ்யா அல்லது அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றது.

ஆனால் ராஜீவ்காந்தி படுக்கொலைக்கு பிறகு பக்கத்து நாடான இந்தியாவின் ஆதரவைக் கூட விடுதலைப்புலிகள்  இழந்தது .
உலக நாடுகள் ஆதரவு இல்லாத ஆயுதம் ஏந்திய எந்த போராளிக் குழுக்களுக்கும் தனி நாடு கிடைக்க எந்த நாடும் ஆதரவு தராது.

அதே சமயம் இந்திரா காந்தி இன்னும் கொஞ்சம் காலம் உயிரோடு இருந்து இருந்தால், பாகிஸ்தானில் இருந்த "கிழக்கு பாகிஸ்தான் மாகாணம்"  வங்காளதேசமாக  உருவானது போல தமிழர் பெரும்பான்மை பகுதி ஈழம் என்ற தனி நாடாக உருவாகி இருக்கக்கூடும் என்ற பேச்சும் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கிறது .
India along with rebel Mukti Bahini won war with Pakistan; and Pak General Niazi with his 93,000 surrendered unconditionally in 1971. Bangladesh was formed




வரலாறு, " புலிகளும், சிங்கங்களும் ஒரே காட்டில் வாழ முடியாது "  என்பதை திரும்பத்திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்கிறது !

6 comments:

  1. சிறப்பு மாப்ளே...நிறைய நுணக்கமான தகவல்கள் கிடைத்தது❤️👏👏

    ReplyDelete
  2. நன்றி மச்சான்

    ReplyDelete