Sunday, August 19, 2018

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்


படம் ,ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்திற்காக இரண்டு திருமணம் செய்து கொள்வது , நிறைய குழந்தைகள் பெற்று கொள்வது  என்று பிற்போக்கு தனமாக தொடங்கிறது. பிறகு கோலிவுட் வழக்கப்படி ஹீரோ  ஓப்பனிங் , பார்த்ததும் காதல் ஆரம்பம் ஆகிறது.



சாதியை வைத்து கட்டப்பஞ்சாயத்து மற்றும் கொலை செய்வதாக காட்டும் வில்லனுக்கு  "கொடியரசு "  என்று பெயர் வைத்து கார்த்தியை கதாநாயகனாக வைத்தே தோலுரித்து காட்டியது துணிச்சலான விஷயம் பாண்டிராஜ் .




சாதியை வைத்து அரசியல் செய்வதை திட்டும் பஞ்ச் வசனத்தில், குறிப்பாக   'சாதியை வைத்து வியாபாரம் பண்றவங்க'  என்று சொல்றப்ப கோயில் அர்ச்சகர்களை காட்டுவது மிகச்சிறப்பு .



மாற்று சாதி பையன் தன் சாதி பெண்ணிடம் பேசியதை பார்த்து மிரட்டுவது, பதிலுக்கு அவன் எதிர்த்து பேசியதால் கொலை செய்வது நாமக்கலில் கொலைச் செய்யப்பட்ட கோகுல்ராஜை ஞாபகப்படுத்தியது.



கார்த்தி-சயிஷா  காதலால், கார்த்தி குடும்பத்திற்குள் பிரச்சினை வரும்போது , பிரியா பவானி சங்கர் இனிமே " சின்ன வயசுலே இவளுக்கு இவன் தான்,மாமாவை   கட்டிக்கோ" என்று சொல்லி வளர்க்காதீங்க என்று கோவமாக சொன்னாலும் தற்போதைய சமூகத்துக்கு தேவையான ஒன்று



ஆணவக்கொலை செய்தது தன் சாதி ஆள் என்றாலும் ,எதிர்த்து நீதிமன்றம் செல்வது , பிறகு சண்டை போடுவது போன்ற காட்சிகள் 'தன் சாதி என்பதற்காக கொலைக்காரனை கூட " மாவீரனாக",  " கட்டப்பா மாமா " போல ஒரு இனக்காவலராக நினைக்கும் இளைஞர்களுக்கு கொஞ்சம் யோசிக்காவது வைக்கும்"



கடைசியில் குடும்பம் இணைந்து, கார்த்தி-சயிஷா காதலுக்கு சம்மதிப்பது எல்லாம் செம ! ஆனால் எமோஷனல் தூக்கலாவே போட்டு இருக்கிறார் பாண்டிராஜ்


பிரியா பவானி சங்கரை மெயின் ஹீரோயினாக காட்டி இருந்தால் கிராமத்து கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும். இமான் இசையில் ஒரு பாட்டு கூட சரி இல்லை. கார்த்தியின் கதைத் தேர்வு தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது .


கிளைமாக்ஸில் கார்த்தி "இரண்டு பொண்டாட்டி கட்டுவது எல்லாம் இங்க சகஜம் தானே"  என்பதை கொஞ்சம்  எதிர்ப்பது போல வசனம் வைத்து காட்டி இருக்கலாம்.சூரியின் காமெடி ரொம்ப நாள் கழித்து சிரிக்க வைக்கிறது.


மொத்தத்தில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என கமர்ஷியல் கதையில் சமூகத்துக்கு தேவையான ஒரு சில நல்ல விஷயங்களையும் சேர்த்து ஒரு பக்கா  எண்டர்டெயினர் கொடுத்து இருக்கிறார்.



 'தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணு',  ' இதே நடிகர் படமாக இருந்தால் லைக் வந்து இருக்கும் ' தொணியில் கார்த்தியை விவசாயி ஆக கட்டமைக்காமல்,  IT போன்ற மாற்றுதுறையில் இருந்து விவசாயத்துக்கு வந்து அதை லாபகரமான தொழிலாக கொண்டு போகிறவர்கள் போல காட்டி இருந்தால் இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்து இருக்கும்.



புத்தக வாசிப்பு, உரையாடல், திரைப்படங்கள் மூலம் தான்  சமூகத்தில் உள்ள  பிற்போக்கு தனத்தை உடைக்க முடியும்.அதனால் இதுப்போல விமர்சனமும் தேவை என்று நினைக்கிறேன் .

5 comments:

  1. Ena macha movie review va..movie to society..nalla irunthuchu

    ReplyDelete
  2. சிறப்பு மாமே..❤️

    ReplyDelete
  3. Harrah's Resort Atlantic City launches Harrah's Resort Atlantic City
    The resort, which has more 동두천 출장샵 than 200,000 square feet of casino 남양주 출장샵 space, was named 계룡 출장마사지 Harrah's Resort in 나주 출장샵 New Jersey in November 전주 출장안마 2019.

    ReplyDelete