Wednesday, August 29, 2018

பேருந்தில் இடஒதுக்கீடு

  பேருந்தில்    இடஒதுக்கீடு 







அரசு பேருந்துகளில்  பெண்கள்  இருக்கைகள் , பொது  இருக்கைகள் என்று  இருக்கும் . சில சமயம் பேருந்தில் பொது இருக்கைகள் பயணிகளால் நிரப்பப்பட்டு, பெண் இருக்கைகள் காலியாக இருந்தாலும் ஆண்களால் பெண் இருக்கைகளில் (பெரும்பாலும் ) உட்காரமுடியாது .



அந்த நேரத்தில் சில ஆண்கள்  "பாருங்க!! நம்மால இடம் காலியாக இருந்தும் உட்காரமுடியல... ஆனா இவங்க மட்டும்  பொதுஇருக்கைலேயும் உட்காரலாம் , பெண்இருக்கைலேயும்  உட்காரலாம் . இப்பலாம் பெண்களுக்கு தான் அரசாங்கம் எல்லா சலுகையும் குடுக்குது . கல்வி, வேலைவாய்ப்பு என்று பெண்கள் எல்லா இடத்திலேயும்  ஆண்களை விட  வளர்ந்துட்டாங்க "  என்று புலம்பவதை கேட்கமுடியும்.  (முன்பு நானும் புலம்பியவன் தான் ).



ஆனால் சமூக யதார்த்தம் என்ன ????  ஒரு ஆண் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும் , அவரை எந்த பெண்ணும் பாலியல் தொந்தரவு செய்யபோவதில்லை,  வேண்டும் என்று உரசவோ இடிக்கவோ போறதில்லை. (பெரும்பாலும்)

                                 


இதை எல்லாம் பேருந்தில் பயணிக்கும்  பெண்கள்  சில ஆண்களால்  அனுபவிக்கிறார்கள்.   சில ஆண்கள் செய்யும் தவறக்காக மற்ற ஆண்களும்  சட்ட  விதிகளை ஏற்க தான் வேண்டும்.


பெண்சிசுகொலை, வரதட்சணை கொடுமை, பாலியல் வன்புணர்வு இதை எல்லாம் பெண்கள் தான்  அனுபவிக்கிறார்கள்  . அதனால் தான் பெண்களுக்கு இடஒதுக்கீடு, கல்வி ஊக்கதொகை, பாதுகாப்பு சட்டங்கள்  etc .  


இதை பற்றி எல்லாம் தெரியாமல்  "All Indians are my brothers and sisters " என்று பள்ளியில் படித்ததை வைத்து  "எல்லாரும் சமம் தான்,  அது என்ன  அவங்களுக்கு மட்டும்  தனி சலுகை  " என்று அறியாமையில் பேசுவது அழகல்ல!!!



இதுபோல விளிம்பு நிலை சமூகங்களின் பாதுகாப்புக்காக தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது . அதையே இன்று நீக்க முயற்சி செய்கிறார்கள் .




அது சலுகை அல்ல , அவர்களின் சமஉரிமை . எந்த காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்களோ  அதை வைத்து தான்    அவர்களுக்கு  தீர்வும்  கொடுக்க முடியும்.


 தவறுகள் இருந்தால் சரிபடுத்த வேண்டுமே தவிர ,  அதை முழுவதுமாக நீக்கவது அறிவுடைமை ஆகாது!

"கையில் புண் இருக்கிறது என்பதற்காக கையையே வெட்டி விட முடியாது "

No comments:

Post a Comment