Tuesday, August 14, 2018

சுதந்திர தின வாழ்த்துக்கள்

       சுதந்திர தின வாழ்த்துக்கள் 



நேரு,காந்திநேதாஜி பற்றி தவறான கதை திட்டமிட்டு பரப்படுகிறது.அதற்கு ஒரு சிறிய விளக்கம்.

*பிரிட்டிஷ் ராணுவ படையில் இருந்த இந்திய வீரர்கள் பலர் ஜப்பானிடம் கைது ஆகி இருந்தனர் .(They are called Prisoners of War).

*ஜப்பான் உதவியோடு சிறையில் இருந்த இந்திய வீரர்களை சேர்த்து INA(Indian National Army) சிங்கப்பூரில் நேதாஜியால் தொடங்கப்பட்டது.
இரண்டாம் உலக போரில் ஜப்பான் வீழ்ந்ததால் ,INAவும் சரண் அடைந்தது.(INA Trial ).
இதில் நேதாஜி பிரதமர் ஆவதை எங்கே நேருவும், காந்தியும் தடுத்தனர்?

* ரஷ்யா மற்றும் அமெரிக்கா அணியில் சேராத உலக நாடுகளின் தலைவராக நேரு போற்றப்பட்டவர்(One of the Architects who founded Non-Align Movement).

*காந்தியும், நேருவும் நினைத்து இருந்தால் பாகிஸ்தான் போல , இந்தியாவும் ஒரு இந்து நாடாக உருவாக்கி இருக்கமுடியும்.
ஆனால் நேரு பொதுவுடைமை (Socialism) சித்தாந்தை பின்பற்றியதால் அதைத் தவிர்த்தார்.

அப்புறம் அவர்களை எதிர்ப்பதால் யாருக்கு என்ன லாபம்?

* நேதாஜி மேற்கு வங்காளத்திலும் மற்றும் தென்தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலும் செல்வாக்கு பெற்றவர்.அவர்கள் ஓட்டு நேதாஜியை ஆதிர்ப்பவர்களுக்கு கிடைக்கும்.

* காந்தி இந்து மதத்தில் இருந்தே சாதி கொடுமைகளை ஒழிக்க நினைத்தார்.அதனால் முஸ்லிம்கள் போல,அம்பெத்கர் கோரிக்கைப்படி தலித்துகளுக்கு Separate Electorate கொடுத்தால் பிரிவினை உருவாகும் என்று ஏர்வாடா ,(புனே) சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.கடைசியில் அம்பெத்கர் காந்தி முடிவை ஏற்று,அதற்கு பதிலாக தனி தொகுதிகளை (Reserved Constituency) பெற்றுக்கொண்டார்.(Poona Pact).இந்த காரணத்தால் பெரும்பாலான தலித்துகளுக்கு காந்தி பிடிக்காது.

அதனால் ஒரு பக்கம் காந்தியை
முன்னிறுத்தி Swach Bharat Campaign நடத்திக் கொண்டே,காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் சிலை வைப்பவர்களுக்கு மட்டுமே பலன்.

இந்திய சுதந்திரத்துக்கு நேரு,காந்தி நேதாஜி ,அம்பெத்கர் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்காற்றி இருக்கிறார்கள்.அவர்கள் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடாக மாறத் தான் ஆசைப்பட்டனர்.
இன்று பிறரை "ஆண்டி இந்தியன்" என்று சொன்னவர்கள் சுதந்திர போராட்டத்துக்கு எதுவுமே செய்யாதவர்கள்.

"We are Indians,firstly and Lastly"❤️
- Dr B.R.AMBEDKAR


#HappyIndependenceDay

16 comments:

  1. Yean thevar mattum nethaji yai kondadukirargal.

    ReplyDelete
    Replies
    1. ஏனென்றால் நேதாஜி தொடங்கிய FORWARD BLOC கட்சிக்கு தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கம் தான் முன்னணி தலைவராக இருந்தார்.அதனால் அவர்கள் வசிக்கும் தெருக்களில் கூட பசும்பொன்,நேதாஜி படம் போட்ட மன்றம்,போஸ்டர் இருக்கும்

      Delete
  2. Seperate electorate and Reserved Constituency- pls Explain this what is the difference!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. In separate electorate,both voters and candidates are from same community (Eg.In Muslim constituency, Muslim voters would elect their representative from Muslim) whereas in reserved constituency,all eligible voters can vote irrespective of their community,but candidates only from the respective community

      Delete
    3. Simple.... Separate electorate la particular community (example dalit) avanga Mattum than Nika mudium.. Avanga community Mattum than vote panna mudium... But in case reserved electorate la avanga community Mattum than Nika mudium... But ellarum vote pannalam...



      Ellarum vote pandrathala... People can vote better person.. In case separate electorate Na easy ah Oru community la irukuravangala satisfy pandra mare policy iruntha podhum avanga Mattum than win pannuvanaga

      Delete
    4. Separate electorate- eg:Dalits allocate Pani irukanga na, Dalits mattum dhan vote panuvanga & dalits mattum dhan candidate.Apo assemblyla dalits issues ah MLA,MP pesiye aaganum.

      Reserved constituency-eg: Dalits mattum dhan candidate,but voters from all community.so MLA,MP Dalits issues pesama kooda win panalam.

      Delete
  3. குறைகள் இருக்கு தான்.அம்பேத்கர் அனைத்தயும் பொறுத்துக்கொண்டு சட்ட அமைச்சர் ஆனதால் தானே ஓரளவுக்கு சட்டமாவது சரியாக இருக்கு

    ReplyDelete
  4. athiyaman super da ✌️ ... continue this .. my best wishes ✌️✌️

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Nice athiyaman,continue....
    Always my best wishes with you
    Soon you get healthy and wealthy life.
    God bless you my child.
    Be happy??

    ReplyDelete
  7. நன்றி சித்தி 🙏🏽✌️👍

    ReplyDelete
  8. I love to learn history. And I have learned few today. Nice work. Informative 👏👏

    ReplyDelete