Wednesday, August 22, 2018

மதம் மாறுகிறதா கடவுளின் தேசம்???

மதம் மாறுகிறதா கடவுளின் தேசம்???

1924க்கு பிறகு கேரளாவில் தற்போது தான்  மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் , மத்திய அரசிடம் தேசிய பேரிடராக அறிவிக்க கேரளா அரசு கோரிக்கை வைத்தது. தேசிய பேரிடர் என்று அறிவித்தால்  தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் 
(NDRF ) உதவி கிடைக்கும் . ஆனால் மத்திய அரசு , இதை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டம் இல்லை என்று கைவிரித்து விட்டது . மத்திய அரசுக்கு தேசிய பேரிடராக அறிவிக்க மனம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதுக்கு காரணம் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக இந்தியாவிலேயே (வலுவாக ) இல்லாத மாநிலம் கேரளா .




தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல மாநிலங்களின் நிதியுதவி 100கோடியை தொடும்போது தான், பாஜக ஆளும் மாநிலமான ஹரியானா அரசு நிதியுதவி அறிவித்தது. மத்திய அரசு 500 கோடி நிதி அறிவித்தது (ஏற்கனவே 100 கோடி அறிவித்தது ).


ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 700 கோடி நிவாரண நிதி தருவதாக அறிவித்துள்ளது . மதமாற்றத்திற்காக இந்திய அரசை விட அதிக நிதி தருகிறது என்று சிலர் பேச தொடங்கி உள்ளனர். அவர்களுக்காக ஒரு சின்ன தகவல்.



1947 சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் போல இந்துக்களுக்கு  இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்று சிலர் சொன்னதை பொருட்படுத்தாமல் நேருவும் காந்தியும்  இந்தியாவை ஒரு மதச்சார்பின்மை (Secularism) நாடாக வடிவமைத்தனர். அது பிடிக்காத காரணத்தால் இன்றுவரை சங் பரிவாரங்கள் (RSS etc..) அவர்களுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர்.


பாகிஸ்தான் என்ற நாடு முஸ்லிம்கள் போராடி பெற்ற நாடு.  இந்தியா என்பது இந்து, முஸ்லிம், சீக்கியம்  என அனைத்து மதத்தினரும் போராடி பெற்ற நாடு.


இந்தியா என்ற நாடு சுதந்திரம் பெற்றபோது பல நாடுகளாக பிரியும் என்று  உலக நாடுகள் நினைத்தன . ஆனால் 70 ஆண்டுகள்  கடந்தும் இந்தியா பிளவுபடாமல் இருப்பதற்கு காரணம் நாம் பின்பற்றும் மதச்சார்பின்மை கொள்கை மற்றும் அரசியல் அமைப்பு சட்டம்  (Constitution) .


மனிதநேயம், மத நல்லிணக்கம்  ஒருபுறம் என்றாலும், நம் சுய லாபமமும் இதில் இருக்கிறது. இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்துமே தன்னுடைய வெளியுறவு கொள்கையை   சுய லாபத்திற்காக மட்டுமே  கட்டமைக்கும்.


அயல்நாட்டில் லேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தில் (Remittance) அரபு நாடுகளின் பங்கு அதிகம் .



 தற்போது UAE உதவுவதற்கு  அதனுடைய சுயலாபம் கூட ஒரு காரணம் . ஏனென்றால் மலையாளிகள் பெரும்பாலும் UAE ல் அனைத்து வேலைகளிலும்  முன்னனியில் இருக்கின்றனர். அவர்களுக்கும் மலையாளிகள் தேவை.


வரலாற்று மற்றும் கலாச்சார காரணங்களால் இந்தியாவில் இருந்து பெரும்பாலும்  பஞ்சாபியர்கள் கனடாவிற்கும்,  தமிழர்கள் தெற்காசிய நாடுகளுக்கும்,  தெலுங்கர்கள் அமெரிக்காவிற்கும் செல்வார்கள். (Now Tamilans are also going to US)
அதுபோல மலையாளிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு (Middle East) செல்வார்கள்.



பல மொழிகள், மதங்கள் கொண்ட மதச்சார்பின்மை நாடாக தான் இந்தியாவை உலகநாடுகள்  பார்க்கின்றன. அதனால் என்ன நன்மை என்று சிலர் நினைக்கலாம்.  உலகில் கிருத்துவ, முஸ்லிம் மதத்தை பின்பற்றும் நாடுகள் தான் அதிகம். உலகில் இந்தோனேஷியா, பாகிஸ்தானுக்கு பிறகு இந்தியாவில் தான் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
(IndiaNepal, and Mauritius are the three Hindu majority countries in the world.)



இந்தியா அதிகமாக இறக்குமதி (Import) செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களுக்காக முஸ்லிம் நாடுகளை தான் நம்பி இருக்கிறது .


மதத்தை முன்னிறுத்தி மாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் தான் அதிகளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யும் கிருத்துவ நாடான அமெரிக்காவிற்கு படிக்கவும், வேலை பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் அவர்கள் தான் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே என்ற கோஷம் போடுகிறார்கள் .யாரையும் இந்த மண்ணை விட்ட போக சொல்ல தார்மீக உரிமை எவருக்கும் இல்லை .


எங்களுக்கு இந்துக்கள் மட்டும் உள்ள நாடு தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் . இந்தியாவுக்கு அருகில் உள்ள  இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நேபாளத்துக்கு செல்லலாம் . விசா, பாஸ்போர்ட் கூட தேவை இல்லை. இந்திய மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் கூட சேரலாம்.


பல்வேறு மதம்,மொழி,இனம்,நிறம் என்று இருந்தாலும் "வேற்றுமையில் ஒற்றமை " என்னும் மனப்பாங்கு இருப்பதால் தான் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா திகழ்கிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை !












3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Even if the disaster is not declared as national disaster the ndrf fund can be given to the states.already the govt has declared the disaster as calamity of severe nature.this is sufficient for the ndrf fund.
    The recipient of the highest amount was Karnataka, which got Rs. 913 crore in 2017-18.even though we blamed central govt for favouring the bjp ruled states,there is no sufficient data available to support that claim

    ReplyDelete
    Replies
    1. I agreed but I wrote this blog before their announcement

      Delete